Skip to main content

எச்.சி.எல் வரலாற்றிலே இதுதான் முதல் முறை...

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

 

 

h

 

இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான எச்.சி.எல், ஐ.பி.எம் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட சில மென்பொருள்களை 1.8 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் வரலாற்றிலே அதிக தொகைகொடுத்து வாங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. எச்.சி.எல் நிறுவனம் வாங்கப்போகும் ஐ.பி.எம் மென்பொருள்களின் சந்தை மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என எச்.சி.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வர பெண்கள் பட்டியல்...

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

kotak mahindra and hurun list of top 100 women billionaire

 

 

இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வர பெண் தொழிலதிபர்களின் பட்டியலை கோடக் வெல்த் ஹுருன் வெளியிட்டுள்ளது. 

 

கோடக் மஹிந்திரா வங்கியின் ஒரு பிரிவான கோடக் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வர பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2020 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி பெண்களின் நிகர சொத்துமதிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி இந்தியாவின் மிகப்பெரிய பெண் கோடீஸ்வரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 54,850 கோடி ரூபாய் ஆகும்.

 

இவருக்கு அடுத்த இடத்தில், 36,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பயோகானின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார்-ஷா இடம்பெற்றுள்ளார். யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் தலைவர் லீனா காந்தி திவாரி 21,340 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த ராதா வேம்பு 11,590 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் சோஹோ (zoho) நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை தன வசம் வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

HCL தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ஷிவ் நாடார்... புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் ரோஷினி நாடார்...

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

shiv nadar steps down as hcl chairman

 

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் விலகுவதாகவும், அவருக்குப் பதில், அவரது மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா அப்பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷிவ் நாடார், இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தற்போது நிர்வாகம் சாரா இயக்குநராக இருந்துவரும் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, ஜூலை 17, 2020 முதல் இயக்குநர்கள் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷிவ் நாடார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை மூலோபாய அதிகாரியாகவும் பொறுப்பில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வயதான ஷிவ் நாடார், அஜய் சவுத்ரி, அர்ஜுன் மல்ஹோத்ரா உள்ளிட்ட எட்டு பேருடன் இணைந்து நிறுவிய இந்நிறுவனம் இன்றைய தொழில்நுட்ப உலகின் மிகமுக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. 38 வயதாகும் ரோஷினி மல்ஹோத்ரா 2019 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 54ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.