
தனது பெண் நண்பர் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சந்தர் பிரகாஷ் காதுரியா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநில பாஜக செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராகப் பதவியில் இருப்பவர் சந்தர் பிரகாஷ் காதுரியா. இவர் கடந்த 21-ம் தேதி சண்டிகரில் உள்ள தனது பெண் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, இரண்டாவது மாடியிலிருந்த வீட்டின் பால்கனியில் இருந்து திடீரென துணிகளைக் கட்டி வேகமாகக் கீழே இறங்கியுள்ளார் சந்தர் பிரகாஷ். அப்போது எதிர்பாராத விதமாகத் துணி அவிழ்ந்ததால், பாதி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வரலான நிலையில், அவரை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து நீக்குவதாக ஹரியானா மாநில பாஜக தலைமை அறிவித்துள்ளது.