Skip to main content

ராம் ரஹீமுக்கு ஹரியானா பாஜக அரசு ராஜமரியாதை!

Published on 26/08/2017 | Edited on 26/08/2017
ராம் ரஹீமுக்கு ஹரியானா பாஜக அரசு ராஜமரியாதை!



கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ராம் ரஹீமுக்கு ஹரியானா பாஜக அரசு ராஜமரியாதை வழங்குவதாக கூறப்படுகிறது. அவருடன் பெண் உதவியாளர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ராம் ரஹீமை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு கூறியதும். அவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து  குற்றவாளி ராம் ரஹீமை, போலீசார் கைது செய்து ஹெலிகாப்டர் மூலம் ரோடக் அழைத்து சென்றனர்.

அவருடன் ஏராளமான பைகள் கொண்டு செல்லப்பட்டிருப்பது நீதிமன்ற வீடியோவில் பதிவாகியுள்ளது. ரோடக்கில் சொகுசு விடுதி ஒன்றிற்கு ராம் ரஹீம் அழைத்து செல்லப்பட்டு, ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மாலை சிறையில் அடைத்தனர். அங்கு மினரல் வாட்டர் வசதியுடன் உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரத்யேக டிவி, நாளிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்