Skip to main content

குஜராத் தேர்தல்: கட்சி மாறி ஓட்டு போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் சஸ்பெண்ட்!

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
குஜராத் தேர்தல்: கட்சி மாறி ஓட்டு போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் சஸ்பெண்ட்!

குஜராத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 3 ராஜ்யசபா காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க சார்பில் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இவர்களது வெற்றி தீர்மானிக்கப்பட்டது தான். இதில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகமது படேல் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார்.

முன்னதாக தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இரண்டுபேர் ஓட்டு அளித்த விவரத்தை வெளிப்படையாக கூறியதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் நடந்தேறியது.

இந்நிலையில் கட்சி மாறி ஓட்டு போட்டதாக வகேலா உட்பட 14 காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் மாநில காங். பொறுப்பாளர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்