Published on 19/04/2018 | Edited on 19/04/2018

ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்தை தாண்டியது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் 24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன் தினம் பவுன் 23 ஆயிரத்து 824 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு 112 ரூபாய் உயந்து 23 ஆயிரத்து 936 ஆனது. இன்று பவுனுக்கு மேலும் 88 ரூபாய் அதிகரித்தது. இதன் மூலம் ஒரு பவுன் 24 ஆயிரத்து 24 ஆக விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பு மற்றும் தங்கம் மீதான அதிக முதலீடுதான் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க டாலருகு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுக்கிறது.