Skip to main content

அரசியல் சட்டப்படி முடிவு எடுக்கப்படும் ஆளுநர் உறுதி-  ஆளுநர் சந்திப்புக்கு பிறகு குமாரசாமி பேட்டி 

Published on 16/05/2018 | Edited on 17/05/2018

கர்நாடக சட்டசடை தேர்தலின் முடிவுகள் வெளியாகி கர்நாடகாவை ஆளப்போவது காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணியா அல்லது பா.ஜ.கவா என இழுபறி நடந்து வரும் நிலையில் இன்று ஆளுநரை சந்தித்த குமாரசாமி  செய்தியாளர்களை சந்தித்தார்.
 

election

 

அப்போது கூறுகையில், பத்து எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே ஆளுநரை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பாக 118 எம்.எல்.ஏக்களின் ஒப்புதல் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்து நிலையான ஆட்சி கர்நாடகத்தில் அமைப்பது பற்றியும், தங்கள் பக்கம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருப்பது பற்றியும் ஆளுநரிடம் விளக்கியுள்ளோம்.

அரசியல் சட்டப்படி, சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார் என குமாரசாமி கூறினார்.

சார்ந்த செய்திகள்