Skip to main content

கூகுள் டூடுல் - ‘கஜல் ராணி’ பேகம் அக்தரின் 103ஆவது பிறந்ததினம்!

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
கூகுள் டூடுல் - ‘கஜல் ராணி’ பேகம் அக்தரின் 103ஆவது பிறந்ததினம்!

கூகுள் தேடுதளத்தில் இன்றைய தினம் புகழ்பெற்ற கஜல் பாடகர் பேகம் அக்தரின் 103ஆவது பிறது இடம்பெற்றுள்ளது. ‘கஜல் ராணி’ என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் அக்தரிபாய் ஃபைஜாபாதி. இவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபைஜாபாத் பகுதியில் அக்டோபர் 7ஆம் தேதி, 1914ஆம் ஆண்டு பிறந்தவர். 



தனது சிறுவயதில் உஸ்தத் இம்தாத் கான் என்பவரது பயிற்சியில் இசை பயின்ற பேகம், தனது 15ஆவது வயதில் முதல்முறையாக பொதுமக்களின் மத்தியில் பாடினார். பொதுமக்கள் மத்தியில் பாடிய முதல் பெண் என்ற பெருமையும் இவரையே சேரும். 

கூகுள் டூடுள் படத்தில் ‘ஓ’ இருக்கும் இடத்தில் கையில் சித்தார் இசைக்கருவியுடன் அமர்ந்துள்ளார் பேகம். அவரைச் சுற்றி மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டுள்ளன. அவரது இசையை ரசிகர்கள் ரசித்தபடி அமர்ந்துள்ளதைப் போல் அந்தப்படம் இடம்பெற்றுள்ளது. 

பேகம் அக்தர் கஜல், தாத்ரா மற்றும் இந்துஸ்தானி இசைக்கலைகளில் ஒன்றான தும்ரி வகைப்பாடல்களில் கைதேர்ந்தவர். இவரது ஒப்பற்ற திறமையையும், குரல் வளத்தையும் கண்டு இந்திய அரசு இவருக்கு 1968ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1972ஆம் ஆண்டு சங்கீத் நதக் அகாடெமி விருதும், அவர் இறந்தபின் 1975ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தது. 

அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு இசைக் கச்சேரியில் கலந்துகொண்ட பேகம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.அக்டோபர் 30, 1974ஆம் ஆண்டு அவரது உயிர் பிரிந்தது.  

சார்ந்த செய்திகள்