இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கோவாவிலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து, கோவாவில் நேற்று முதன்முறையாக தினசரி கரோனா எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது.
மேலும் ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் கரோனா பரிசோதனை முடிவு வெளிவர மூன்று நாட்கள் ஆகிறது. இதனையடுத்து கோவா அரசு, அங்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை அமலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவா அரசு, சூதாட்ட விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 50 சதவீத மக்களுடன் செயல்படலாம் என அறிவித்துள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளையும் கோவா அரசு தள்ளிவைத்துள்ளது.