காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைப்பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவிற்கு சென்ற அவர் தொடர்ந்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஒற்றுமை பயணத்தில் 20ம் நாளான இன்று தனது சொந்த தொகுதியான வயநாட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் இளைஞர்கள் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற சிறுமி ராகுல் காந்தியை பார்த்த சந்தோசத்தில் அவரை கட்டிக்கொண்டு அழுதது பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது.
அந்த சிறுமி ராகுல் காந்தியின் அருகே சென்றதும் சந்தோசத்தில் குதித்து, சிரித்து, அழுது என அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே நேரத்தில் செய்த அந்த காட்சியை கண்டோர் அனைவரும் தங்களை மறந்து ரசித்தனர்.
ஒருவரை பார்த்து சந்தோசத்தில் அழுவது சிரிப்பது என்பது இதுவரை சினிமா நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அடிக்கடி நடக்கும். ஆனால் ஒரு அரசியல் தலைவருக்கு இத்தகைய அனுபவம் நடப்பது அரிது.