Published on 28/06/2021 | Edited on 28/06/2021

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகளை மட்டுமின்றி பொருளாதார இழப்புகளையும் இந்தக் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியது. இதற்கிடையே கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (28.06.2021) மாலை 3 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பொருளாதார நிவாரணத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நிலை நகரங்களில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.