Skip to main content

கேரளா யாத்திரையிலிருந்து பாதியில் கிளம்பும் அமித்ஷா - கூட்டமின்மை காரணமா?

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
கேரளா யாத்திரையிலிருந்து பாதியில் கிளம்பும் அமித்ஷா - கூட்டமின்மை காரணமா?

கேரளாவில் பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஜனரக்சா யாத்திரையில் இனி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேரள மாநிலத்தில் 14 நாட்களுக்கான ஜனரக்சா யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரைக்கு தேசிய தலைவர் அமித்ஷா தலைமை தாங்கி வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இந்த யாத்திரையை அமித்ஷா தொடங்கிவைத்தார்.

இந்த யாத்திரை வரும் அக்.17 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், யாத்திரை தொடங்கிய மூன்றாவது நாளிலேயே அமித்ஷா டெல்லி கிளம்புவதாக அறிவிப்புகள் வெளியாகின. இதுகுறித்து, ஆளும் கட்சியான சிபிஎம் இந்துத்துவ அமைப்புகளை மக்கள் தவிர்த்தே வந்துள்ளனர். அவர்களது (பாஜக) இந்த யாத்திரைக்கு பொதுமக்களின் சார்பில் போதிய வரவேற்பு கிடைக்காததால்தான் அமித்ஷா பாதியிலேயே கிளம்பிச்செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மறுத்துள்ள பாஜக, முக்கிய காரணங்களால் அமித்ஷா டெல்லியில் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அந்த பணிகள் முடிந்ததும் மீண்டும் யாத்திரையில் கலந்துகொள்வார் என தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்