Published on 21/01/2021 | Edited on 21/01/2021
ரேஷன் பொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டத்தை ஆந்திராவில், அம்மாநில முதல்வர் இன்று (21.01.2021) தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள், ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கே வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படும்.
இதற்காக 9,260 வாகனங்களை 539 கோடியில் ஆந்திர அரசு வாங்கியுள்ளது. ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்குவதால், அரசுக்கு ஆண்டுக்கு 830 கோடி கூடுதலாக செலவாகும்.
இந்தத் திட்டம் குறித்து பேசியுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ரேஷன் பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நிலையைக் கண்டு உருகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.