Published on 11/02/2022 | Edited on 11/02/2022
காரின் பின்னிருக்கையில் நடுவில் அமருவோருக்கும் சீட் பெல்ட் அமைக்க வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கார்களின் முதல் வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின் வரிசையில் இரண்டு ஓர இருக்கைகளுக்கு முன்முனை சீட் பெல்ட் வசதி வழங்கப்படுகிறது. பின்வரிசைகளில் நடு இருக்கைகளுக்கு விமானங்களில் இருப்பது போல இரு முனை சீட் பெல்ட் ஒதுக்கப்படுகிறது. இனி நடு இருக்கைகளுக்கும் முன்முனை சீட் பெல்ட் அமைப்பதை வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சராசரியாக ஐந்து லட்சம் சாலை விபத்துகள் நடப்பதாகவும், அவற்றில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.