Skip to main content

மின்சார மசோதா மக்களவையில் தாக்கல் - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Electricity bill tabled in Lok Sabha  opposition parties strongly opposed

 

மின்சார மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

 

மின் விநியோகத்தை தனியாருக்கு வழங்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவானது தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மின்சார ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல் எப்போது? - வரைவுத் திட்டத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
reported that the Lok Sabha elections will be held on April 16

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 16 ஆம் தேதி தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் வரைவுத் திட்டத்தை வழங்கியுள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

Next Story

நாடாளுமன்றத்தில் அத்துமீறிய இருவர்; பாஜக எம்.பியின் பரிந்துரை கடிதத்துடன் உள்ளே புகுந்தது அம்பலம்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Two trespassers in Parliament; Ambalam entered with the recommendation letter of BJP MP

நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் திடீரென அத்துமீறி மக்களவை பகுதியில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கையில் வண்ணத்தை உமிழும் புகை போன்ற வெடி பொருள் இருந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இருவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை அவர்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கமிட்டதோடு  தங்கள் காலனியில் மறைத்து வைத்திருந்த புகையை உமிழும் பொருளை எடுத்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்ற வருகிறது. தடை செய்யப்பட்ட பொருட்களுடன் அந்த இருவர் எப்படி பார்வையாளர் பகுதிக்கு வந்தனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு வளையங்களை மீறி நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலகட்ட சோதனைக்கு பின்னரே பார்வையாளர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில் இந்த சம்பவம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. பல எதிர்க்கட்சி தலைவர்களும், எம்.பிக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உள்ளே நுழைந்த இருவரும் மைசூரு பாஜக  எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை கடிதத்தைக் காட்டி உள்ளே நுழைந்துள்ளது விசாரணை தெரியவந்துள்ளது.