இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள் எவ்வளவு வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு வேட்பாளர் எவ்வளவு ரூபாய் செலவு செய்யலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம் எனவும், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ரூ.70 லட்சம் மட்டும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள அதிகபட்ச செலவீனங்கள் விபரம் பின்வருமாறு...
மட்டன் பிரியாணி - ரூ200
சிக்கன் பிரியாணி - ரூ.180
டிபன் செலவு - ரூ.100
தண்ணீர் பாட்டில் - ரூ.20
டீ - ரூ.10
பால் - ரூ.15
வெஜிடபிள் ரைஸ் - ரூ.50
இளநீர் - ரூ.40
பூசணிக்காய் - ரூ.120
புடவை மற்றும் டி-ஷர்ட்- ரூ.200 மற்றும் ரூ.175
பொன்னாடை - ரூ.150
பிரச்சார வாகன ஓட்டுநர்கள் ஊதியம் - ரூ.695
மண்டபம் வாடகை செலவு - ரூ.2000 முதல் ரூ.6000 வரை
வால் சைஸ் எல்.இ.டி வாடகை கட்டணம்(8 மணி நேரத்திற்கு) - ரூ.12,000
5 நட்சத்திர ஓட்டலில் ஏ.சி.அறை செலவு - ரூ.9,300
3 நட்சத்திர ஓட்டலில் ஏ.சி.அறை செலவு - ரூ.5,800
பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் மேளத்துக்கான வாடகை செலவு - ரூ.4,500
மற்றும் தொப்பி, எலக்ட்ரானிக் சாதனங்கள், பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள், பிளக்ஸ்கள் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த வரம்புகளை மீறி வேட்பாளர்கள் செலவு செய்யக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.