Published on 09/11/2018 | Edited on 09/11/2018

மத்திய பிரதேசத்தில் தேர்தலில் போடியிட உள்ள வேட்பாளர் ஒருவர் ரூ. 10,000 வைப்பு தொகையை கட்ட நாணயங்களாக கொடுத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சாட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் இந்தூர் தொகுதியில் ஸ்வர்னிம் பாரத் இன்குலாம் கட்சி சார்பில் தீபக் பவார் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று இவர் மனு தாக்கல் செய்ய வந்தபோது வைப்பு நிதியாக 10,000 ஒரு ரூபாய் நாணயங்களை செலுத்தி உள்ளார். இந்த ஒரு ரூபாய் நாணயங்களை தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சுமார் 90 நிமிடங்கள் எண்ணி உள்ளனர். நாயணங்கள் சரி பார்க்கப்பட்ட பிறகு தீபக் பவானுக்கு அதற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தீபக் பவார் கூறியது: நான் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் கொடுத்த நன்கொடையை அப்படியே எடுத்து வந்து செலுத்திவிட்டேன் என்றார்.