இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில் ,மீதமுள்ள ஆறு கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , தேசிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்த பிரச்சாரத்தின் போது தனி நபர் மீதான விமர்சனங்கள் மற்றும் தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்டவை தேர்தல் விதி மீறலாகும். எனவே இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளும் தலைவர்களை இந்திய தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள் தரக்குறைவாக மற்றும் தனி நபர் மீது தாக்கி பேசியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து ஆதித்யநாத் அவர்களுக்கு 72 மணி நேரமும் , மாயாவதிக்கு 48 மணி நேரமும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாகவும் , இதனால் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அவருக்கு 48 மணி நேரம் (2 நாட்கள்) தடை விதிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் சமாஜ்வாதி கட்சி தலைவர்களின் ஒருவரான ஆசம் கான் தேர்தல் பரப்புரையின் போது தரக்குறைவாக விமர்சித்ததால் அவருக்கு 72 மணி நேரம் (3 நாட்கள்) பரப்புரை மேற்கொள்ள தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டவர்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கவோ , தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவோ முற்றிலும் இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் கண்ணியமான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் , தனி நபர் மீதான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பி. சந்தோஷ், சேலம் .