Skip to main content

உயிர் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம்-கேரள முதல்வருக்கு நெகிழ்ச்சியை கொடுத்த மீனவர்கள்!!

Published on 21/08/2018 | Edited on 21/08/2018

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இந்த மீட்பு பணியில் மீட்புப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என பலரும் முழுவீச்சில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடலோர பகுதியில் இருக்கக்கூடிய மீனவர்களும் தங்களின் சொந்த படகுகள் மூலம் வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மக்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தொடர்ந்து மீட்டனர். இதை கேள்விப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் மீனவர்கள் மாநிலத்தின் ராணுவவீரர்கள் என பெருமிதப்படுத்தினர்.

 

FISHERMAN

 

 

 

வெள்ளத்தால் அதிக அளவில் பாதிப்புகள்  ஏற்பட்டு இருக்கிறது என்ற செய்தி பரவிய பின்னர் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலமாக கொண்டுவந்த அத்தியாவசிய பொருட்கள் வெள்ள பாதிப்பான இடங்களுக்கு அருகில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டன. பேரிடர் மீட்புக்குழு, ராணுவ வீர்கள் என தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகளில் மீனவர்களும் கரம் கோர்த்தனர். கடலோர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை தங்களின் சொந்த போட்டுகள் மூலம் மீனவர்கள் மீட்டனர்.

 

 

மீனவர்களின் இந்த ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் கேரள அரசானது மக்களை தொடர்ந்தும் மீட்டு வரும் படகுகளுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஒரு நாளைக்கு மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் அதேபோல படகுகளுக்கு ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை அரசு சரி செய்து கொடுக்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் முதல்வர் எங்களை பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது ஆனால் அந்த சன்மானம் எங்களுக்கு வேண்டாம். சொந்த மக்களை காப்பாற்றுவது என்பதும் எங்களின் கடமை உயிர் காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் என நெகிழ்ச்சியுடன் பல மீனவர்கள் தங்கள் கருத்துக்களை  வீடியோ மூலம் முதல்வருக்கு  தெரிவித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்; முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The Kerala Story film issue Chief Minister Pinarayi Vijayan strongly condemned

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன.

அதே சமயம் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தூர்தர்ஷனில் இன்று (05.04.2024) இரவு 8 மணிக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் தெரிவிக்கையில் “அரசு தொலைக்காட்சிகள் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக  ஒரு போதும் மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி ஒளிப்பரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.