ஆந்திராவில் இரவில் பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு ரயில் நிலையப் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள், திடீரென தடம் புரண்டது. அதன் காரணமாக ரயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான சத்தத்தால், ரயிலில் பயணம் செய்த பணிகள் அலறியடித்தனர்.
பின்னர் உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் தடம் புரலக் காரணம் என்ன என்று விசாரித்த போது, ரயிலை ட்ராக் மாற்றிய தருணத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. லோகோபைலட் உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அங்கிருந்து கிளம்பி மாற்று வழிகளில் பேருந்துகள், ஆட்டோக்களில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. ரயில்வே போலீசார், இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.