Skip to main content

பள்ளிகளை காலவரையின்றி மூடிய மாநிலம்!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

delhi schools

 

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி, நேற்று மாநில முதல்வர்களோடு கலந்தாலோசித்தார். அப்போது, 'தடுப்பூசி திருவிழா' நடத்த ஆலோசனை வழங்கினார். இதற்கிடையே, டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

எனவே, அங்கு ஏற்கனவே ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அங்கு இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் டெல்லியில் நேற்று 7,437 பேருக்கு கரோனா உறுதியானது. இதனைத்தொடர்ந்து கரோனா அதிகரிப்பால், டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மறுஉத்தரவு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்