Skip to main content

9 வினாடிகளில் சரிந்து விழ இருக்கும் கட்டடங்கள்!

Published on 28/08/2022 | Edited on 28/08/2022

 

Buildings that collapse in 9 seconds!

 

நொய்டாவில் அனுமதி மீறி கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட இருக்கிறது.

 

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் விதிமீறி கட்டப்பட்ட சூப்பர் டெக்ஸ் என்ற இரட்டை கட்டடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் சுமார் 2.30 மணிக்கு டெட்டனைட்டருடன் இணைத்து இக்கட்டடம் தகர்க்கப்பட இருக்கிறது. 32 மாடியுடன் 328 அடி உயரத்தில் அபெக்ஸ்  என்ற பெயரில் கட்டப்பட்ட கட்டடமும்,  31 மாடியுடன் 318 அடி உயரத்தில் சியான் என்ற பெயரில் கட்டப்பட்ட கட்டடமும் விதியை மீறி கட்டப்பட்டதால் இன்று இடிக்கப்படுகிறது. இதற்காக 3,700 கிலோ வெடிபொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. கட்டடத்தின் தூண்களின் வெளிப்புறத்தில் வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட நிலையில் 'எடிஃபைஸ்'  என்ற பொறியியல் நிறுவனம் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

 

இந்த கட்டட இடிப்பின்போது சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்டடங்களையும் இடிக்கும் பணிகளுக்காக 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், 9 வினாடிகளில் கட்டடங்கள் இடிந்து விழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குவியும் 55 ஆயிரம் டன் இடிபாடு குப்பைகளை அகற்ற சுமார் மூன்று மாதங்கள் ஆகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்