டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்: சிறிய விபத்து நேர்ந்ததில் பரபரப்பு
டெல்லி விமான நிலையத்தில் உள்ள 86-வது தடத்தில் நேற்று அதிகாலையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம், அருகில் உள்ள 87-வது தடத்தில் அடிஸ் அபாபா செல்லக்கூடிய எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் பயணிகள் ஏறி அமர்ந்து, புறப்பட தயாராக இருந்தது.
விமானத்தை நகர்த்தியபோது, எதிர்பாராத விதமாக அந்த விமானத்தின் இறக்கை, ஏர் இந்தியா விமானத்தின் இறக்கையில் மோதியது. இரு விமானங்களின் என்ஜின்களும் நெருங்கிய நிலையில், விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தின் இறக்கை சேதம் அடைந்தது. பயணிகளுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் நடந்த இந்த சிறிய விபத்து காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.