ஆக்ராவில் உள்ள ஜகதீஷ்புரா பகுதியியைச் சேர்ந்தவரெ சுரேகா குமாரி. இவர் தான் காதலித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு பெற்றோருடனான் உறவை முறித்துக் கொண்டார். இருப்பினும் சுரேகா குமாரி, தனது பெற்றோரின் சொத்துக்களை தனக்கு எழுதி வைக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அவரது பெற்றோர், அதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சுரேகா குமாரி, பல மாதங்களாக பெற்றோரின் வீட்டின் மீது கற்கள், செங்கற்கள், கண்ணாடி ஆகியவற்றை வீசி வந்துள்ளார். இதில் மனமுடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்த புகாரின் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுரேகா குமாரி தனது பெற்றோரின் வீட்டின் மீது கற்களை வீசி துன்புறுத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலான பிறகு, போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.