Skip to main content

மீசை வளர்த்ததற்காக கத்தியால் குத்தப்பட்ட தலித் இளைஞர்! - குஜராத்தில் பயங்கரம்

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
மீசை வளர்த்ததற்காக கத்தியால் குத்தப்பட்ட தலித் இளைஞர்! - குஜராத்தில் பயங்கரம்

மீசை வளர்த்ததைக் காரணமாகக் கூறி தலித் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் திகண்ட் மகேரியா (வயது 17). இவர் பள்ளியில் தேர்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் உயர்சாதி என சொல்லப்படும் சமுதாயத்தைச் சேர்ந்தவர், மீசை வளர்க்கக்கூடாது எனக்கூறி   வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த அந்த நபர் தன் கையில் கொண்டு வந்த கத்தியால் திகண்ட் முதுகில் குத்திவிட்டு தப்பியோடினார். இதன்பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திகண்ட் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே காரணத்திற்காக கடந்த இருவாரங்களில் தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பாவைப் பார்க்கச் சென்ற ஜயேஷ் என்கிற இளைஞர், பட்டேல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டார். 

மீசை காரணங்களால் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் தங்களது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் வலைதளங்களில் உள்ள முகப்புப்படங்களாக முறுக்குமீசை போன்ற படங்களை வைத்து நூதன முறையில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்