Skip to main content

மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
 Curfew extended in Maharashtra till May 31

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் கரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 90,927 என்ற அளவிலும், கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,109 என்ற அளவிலும் உள்ளது. அதேபோல் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,752 என்ற அளவிலிருந்து 2,872 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.


அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கரோனா இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 7088 பேர் குணமடைந்த நிலையில், 1,135 பேர் மகாராஷ்டிராவில் மட்டும் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால் தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்