சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி அந்நாட்டு மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![The coronavirus virus came to India](http://image.nakkheeran.in/cdn/farfuture/ksMDea7y1EZ1JQ4iZ7qXdnYPNaL09XTilaBbftEKA5I/1580372788/sites/default/files/inline-images/sdfsfsdfff.jpg)
சீனாவை மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தங்கள் நாட்டில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவர் ஒருவருக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கேரளாவில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது கேரளாவில் மாணவருக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு வந்தது கொரனா.