Skip to main content

'மக்கள் வெளியே வந்தால் ஓராண்டு சிறை'- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

coronavirus puducherry cm press meet peoples

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை. கரோனா விஷயத்தில் புதுச்சேரி மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்து போலீசாரிடம் சண்டை போடுகின்றனர். புதுச்சேரி மக்கள் வெளியே வராமல் இருக்க தேவைப்படின் துணை ராணுவப்படை உதவி கோரப்படும். புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்