கரோனா தொற்றினை முற்றிலுமாக அழித்தொழிக்க தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்ட ஆராய்ச்சியை தீவிரமாக நடத்தி வருகிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். இந்தியாவில் நேற்று மட்டும் 56 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், 50, 232 பேருக்கு புதிதாக தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு அது சக்சஸ் ஆனால் மட்டுமே மக்களிடமிருந்து பயம் விலகும் ; பாதுகாப்பான சூழலும் உலக அளவில் உருவாகும்.
இந்த நிலையில், கரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுப்பிடிப்பதில் உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் மத்திய அரசுடன் இணைந்து ஹைதராபத்திலுள்ள பாரத் பயோடெக் உருவாக்கி வரும் கோவேக்சின் தடுப்பூசி, 2021, பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’இரண்டு கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ளது. அவைகள் நல்ல செயல் திறனை அளித்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதுவும் நல்ல பலனைக் கொடுக்கும் என நம்பிக்கை இருக்கிறது. 2021, பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இந்த தடுப்பூசி ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது‘’ என்கின்றனர்.