Skip to main content

குறையும் தொற்று எண்ணிக்கை... துளிர்க்கும் நம்பிக்கை -கேரள கரோனா அப்டேட்!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

jk

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகின்றது. 

 

இன்று 2,988 பேருக்கு தொடர்புகள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,862 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 73,904 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,515 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 27,887 ஆக உள்ளது. கரோனா தொற்று காரணமாக  இன்று  14 பேர் பலியாகியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்