இந்தியாவில் கரோனாவிலிருந்து 13.12 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் உயிரிழந்த நிலையில், கரோனாவிற்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மொத்தமாக இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,699 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,64,536 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி வருகிறது.
5.95 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2.7 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 6.64 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 2.09 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 67.17 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.