Published on 30/04/2020 | Edited on 30/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 33,050 என்ற எண்ணிக்கையில் இருந்து, 33,610 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது. அதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325-லிருந்து 8,373 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,075 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.