Skip to main content

மகாராஷ்டிராவில் லட்சத்தை கடந்தது கரோனா!!! ஒரே நாளில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழப்பு!!!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020
 'Corona' crosses lakhs in Maharashtra

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் நேற்று வரை 2.97 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்தது.


இந்நிலையில் மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,493 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,  அங்கு 1,01,141 பேர் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக இதுவரை மகாராஷ்டிராவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,717 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தற்பொழுது இந்தியாவில் மொத்தமாக கரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்