உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவும், சமாஜ்வாடியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ், இம்முறை தனித்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி, அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது சித்தப்பா சிவபால் யாதவ் ஆகியோருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக சமாஜ்வாடி வேட்பாளர்களை நிறுத்தாதது கவனிக்கத்தக்கது.
தேர்தலுக்கு பிறகு தேவைப்பட்டால் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.