Kerala police froze in shock over latest hi-tech cannabis

கடத்தல் பஜாரில் இது புதுசு என்பதால்ஹைடெக் டெக்னிக்கல் முறையான கடத்தல் என்கிறார்கள் கேரள போலீசார். மேலும், இதனைக் கண்டு பிடிக்க மூளையைக் கசக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சரியமும் அதிசயமுமாய்.

Advertisment

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் புளியரை வனப்பகுதியை ஒட்டி கேரளாவின் நுழைவுவாயில் அமைந்துள்ளது. இரண்டு எல்லைப் புறங்களிலும் தமிழக கேரள அரசுகளின் தலா மூன்று சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த எல்லைப் புறங்களை அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு மாநில வாகனங்களும் கடந்து செல்கின்றன. குறிப்பாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்குத்தேவையான உள்ளங்கால் முதல் உச்சி வரையிலான பொருட்கள் வாகனங்களில் செல்கின்றன. இதில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்களும் கடத்தப்படுவதுண்டு. பலதுகள் தப்பித்தாலும் சிலதுகள் சிக்குவதுண்டு.

Advertisment

இந்த நிலையில், கேரளாவின் கொல்லம் ரூரல் எஸ்.பி.யான கே.பி.ரவிக்கு தமிழகம் வழியாக கேரளாவின் ஆரியங்காவுப் பாதையில் வருகிற கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுகிறது எனும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அலர்ட் ஆன எஸ்.பி. தனது க்ரைம் ஸ்குவார்டான டி.ஒய்.எஸ்.பி. அசோக்குமார், புனலூர் டி.ஒய்.எஸ்.பி. வினோத்குமார், தென்மலை எஸ்.ஐ.சாலு உள்ளிட்ட போலீஸ் டீமை அனுப்புகிறார்.

Kerala police froze in shock over latest hi-tech cannabis

இந்த டீம் தமிழக புளியரை எல்லையிலிருக்கும் கேரளாவின் ஆரியங்காவு கோட்டை வாசல் பகுதியில் நேற்றுகாலை முதல் மாலை வரை கண்காணிப்பிலிருந்திருக்கிறார்கள். மாலை சுமார் 6 மணிக்கு மேல் எல்லையைக் கடந்த ஆந்திரப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றை மடக்கிய டி.ஒய்.எஸ்.பி. அதிலிருந்த இருவரையும் விசாரித்திருக்கிறார். தங்களுக்குத்தமிழும் மலையாளமும் தெரியாது. தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும், சபரிமலை போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சபரிமலைக்குச் செல்வதாகத்தெரிவித்த அவர்கள், மாலை அணியாமல் சாதாரண உடையில் அவர்களிருந்ததால் சந்தேகப்பட்ட போலீசார் அந்தக் காரின் மூலை முடுக்கெல்லாம் இரண்டு மணிநேரம் ஸ்கேன் செய்தும் சந்தேகப்படும்படியான பொருட்கள் சிக்கவில்லை. சலித்துப்போன டி.ஒய்.எஸ்.பி. தற்செயலாகக் காரின் டோரைத் திறந்த போது அதன் உட்புறம் ஒன்றின் ஷீட் சமமாக இல்லாமல் மேடும் பள்ளமுமாய் இருப்பது தெரிய, சந்தேகப்பட்ட அவர் அந்த ஷீட்டை ஆயுதம் கொண்டு திறந்தபோது டோரின் உள் அறைகளில் பெரிய பெரிய பொட்டலம் திணிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைப் பிரித்துப் பார்த்தபோது, அத்தனையும் அசல் கஞ்சா என்று தெரிந்ததும் அதிர்ந்து விட்டனர். இது போன்று காரின் நான்கு டோர்களிலும் மறைத்து வைக்கப்பட்ட 30 பாக்கெட்களில் சுமார் 65 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது.

Kerala police froze in shock over latest hi-tech cannabis

விசாரணையில் அவர்கள் தெலங்கானாமாநிலத்தைச் சேர்ந்த செம்பெட்டி பிரம்மையா, சொலசானி ஹரிபாபு என்று தெரிய வந்திருக்கிறது. தெலங்கானாவிலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா, கொல்லம் திருவனந்தபுரம் ஏஜெண்ட்களுக்கு சப்ளை செய்யக்கொண்டு செல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

தெலங்கானாவின் மாவோயிஸ்ட்கள் மறைந்து வாழும் பகுதியில் விளைகிற முதல் தர கஞ்சா இது. இங்குள்ள மார்க்கெட்டின் படி இதன் ஹோல்சேல் விலை ஒரு கோடி. ரீட்டெய்லில் விலை டபுள். மொத்தக் கஞ்சாவையும் காரையும் கைப்பற்றினாலும் பிடிபட்டவர்கள் கூலிக்கு கடத்துபவர்கள். இதன் டோட்டல் ப்ளானையும் அறிய மேல் விசாரணைக்காகத் தென்மலைக் காவல் நிலையம் கொண்டு போவதாகத் தெரிவித்த க்ரைம் பிரான்ஞ் டி.ஒய்.எஸ்.பி.யான அசோக்குமார், கடத்தல் வகையில் புது டெக்னிக் அதனால்தான் ஆந்திரா, தமிழகம் தப்பி எங்களிடம் சிக்கியுள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.