Published on 24/10/2019 | Edited on 24/10/2019
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மஹாராஷ்டிராவில் 175 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது பாஜக கூட்டணி. பெரும்பான்மைக்கு தேவையானதைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது பாஜக.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஹரியானாவில் 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பாஜக கூட்டணி, தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் 42 இடங்களில்தான் முன்னிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை என்னும் நிலையில் பாஜக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் பாஜக கூட்டணி - 42, காங் கூட்டணி - 28, மற்றவை - 20 . அதேபோல மஹாராஷ்டிராவில் பாஜக கூட்டணி - 175, காங் கூட்டணி - 91, மற்றவை - 22.