Skip to main content

'சந்திரயான் - 3 வெற்றி' - காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

nn

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3  நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது  சந்திரயான் - 3.

 

சந்திரயான் -3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையை துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க தயாராகி வந்தனர். தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் தரையிறங்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளுக்கு பின் வெற்றிகரமாக நிலவின்  தென் துருவத்தில் இறங்கி நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என சாதித்தது சந்திரயான் - 3.

 

nn

 

நாடுமுழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்திரயான் - 3 லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் 'சந்திரயான் - 3 திட்டத்தின் வெற்றி 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த வெற்றி' என தெரிவித்துள்ளார். அதேபோல் வெற்றிகரமாக செயல்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடாளுமன்ற எம்.பி ராகுல் காந்தியும் பாராட்டு தெரிவித்துள்ளார். 'பல தசாப்தங்களாக நமது அறிவியல் சமூகம் மேற்கொண்ட அளப்பரிய புத்திக்கூர்மை, கடின உழைப்பில் கிடைத்த வெற்றி. 1962 தொடங்கி இந்திய விண்வெளித்துறை புதிய உயரங்களை எட்டி இளம் தலைமுறைக்கு ஊக்கம் அளித்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்