காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மஹாராஷ்டிராவில் ஆட்சியமைத்த நிலையில், சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட ஒரு புத்தகத்திற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சேவா தள பிரிவு வெளியிட்ட ‘வீர சாவர்க்கர், கித்னே வீர்?' என்ற புத்தகத்தில், சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து வெளியே வந்த போது, ஆங்கிலேயே அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றதாகவும், வீர சாவர்க்கரும், நாதுராம் கோட்சேவும் உடல் ரீதியாக தவறான உறவு வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதற்போது மிகப்பெரிய சர்ச்சையாகி உள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “வீர சாவர்க்கர் ஒரு சிறந்த மனிதர். அவர் தொடர்ந்து சிறந்த மனிதராகவே இருப்பார். குறிப்பிட்ட ஒரு பிரிவு அவருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறது. இது அவர்களின் மனதில் உள்ள அழுக்கை காட்டுகிறது” என்று கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், காங்கிரஸ் வெளியிட்ட இந்த புத்தகத்திற்கு மஹாராஷ்டிராவில் தடைவிதிக்க வேண்டும் என பாஜக தரப்பு சிவசேனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.