Published on 09/12/2019 | Edited on 09/12/2019
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இந்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருவதை ஏற்க முடியாது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.