Skip to main content

சந்திரயான்-2: நிலவின் தரையை நோக்கி  'விக்ரம் லேண்டர்' !

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறங்குகிறது. லேண்டரை தரையிறக்கும் பணியை தொடங்கிய விஞ்ஞானிகள், சரியாக 15 நிமிடத்தில் நிலவில் இறங்குகிறது.
 

chandrayaan 2 mission vicram lander move start in moon isro



அதன் பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து பிரகியான் ரோவர் இன்று அதிகாலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் நிலவின் நிலப்பரப்பை ஆய்வு செய்து இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் அனுப்பும். இந்த நிகழ்வை காண இந்தியா மட்டுமல்லாமல் உலக மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 'விக்ரம் லேண்டர்'   நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ மையத்தில் இருந்து நேரில் பார்வையிட்டு வருகிறார்.
 

 

சார்ந்த செய்திகள்