Published on 07/09/2019 | Edited on 07/09/2019
சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறங்குகிறது. லேண்டரை தரையிறக்கும் பணியை தொடங்கிய விஞ்ஞானிகள், சரியாக 15 நிமிடத்தில் நிலவில் இறங்குகிறது.இந்நிலையில் நிலவின் 400 மீட்டர் தொலைவில் கடைசி நிமிடத்தில் லேண்டரில் இருந்து சிக்னல் வரவில்லை. இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் சோகத்தில் உள்ளனர். சில விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில் 'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ மையத்தில் நேரில் பார்வையிட்டு வந்த நிலையில், பிரதமர் மோடி இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்பட்டார்.