Skip to main content

முன்கூட்டியே ஆட்சியை கலைக்கும் சந்திரசேகர ராவ்? 

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

su venkatesan

 

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது, அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், முதல்வராக இருந்து வருகிறார். கடைசியாக 2018ஆம் ஆண்டு டிசம்பரில் தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.

 

இந்தநிலையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ஆட்சியை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு சந்திரசேகர ராவ், 8 மாதங்களுக்கு முன்னதாகவே தனது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார் என்பதும், கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையியே சந்திரசேகர ராவ், ஆட்சியை முன்கூட்டியே கலைக்கப்போவதாக வெளியான தகவல்கள் வதந்தி என கூறி, எம்.எல்.ஏ.க்களை அதில் கவனம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்