Published on 24/05/2022 | Edited on 24/05/2022

அண்மையில் மத்திய அரசு சார்பில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சமையல் எண்ணெய்களுக்கு வரி விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது மத்திய அரசு. உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்த வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இறக்குமதி வரியை ரத்து செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெய்யை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.