தமிழக அரசால் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நீர்த்துப்போக செய்வதாக தமிழக அரசு குற்றச்சாட்டு வைத்திருந்தது. அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கிடுவது தொடர்பாக புதிய கூடுதல் மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக துணைவேந்தர் நியமனத்துக்கு எதிரான வழக்குகள் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் மீதான வழக்குகள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த கூடுதல் மனு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.