Published on 02/06/2022 | Edited on 02/06/2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கரோனா பரவல் தற்போது மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேலாக பதிவாகி வந்த நிலையில், இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 3,712ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.