தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் புகழ் பெற்ற நிறுவனம் காபி டே. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த். இவர் திடீரென மாயமாகியுள்ளார். இவர் எழுதியுள்ள கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
காபி டே சென்னை மற்றும் பெங்களூரு அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இருந்த வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல், தன்னிடம் மாமுல் கேட்டார். அதனை கொடுக்க முன்வரவில்லை என்பதால் வருமான வரித்துறை தீவிரமாக சோதனை நடத்தியது. இதனால் தனது தொழில் பாதிப்படைந்தது என சித்தார்த் கடிதத்தில் எழுதியுள்ளார்.
சித்தார்த் குறிப்பிட்ட வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் யார் என்றால் தற்போது வேலூர் தொகுதியின் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள முரளி குமார்.
மாயமான சித்தார்த் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர். பாஜகவில் உள்ள எஸ்.எம். கிருஷ்ணா, தனது உறவினர் சித்தார்த் மாயமான விஷயத்தையும், சித்தார்த் கடிதம் குறித்தும் அம்மாநில பாஜக அரசிடம் சொல்லி விசாரிக்க சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.