சுமார் 300 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் தோடா பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்தது. அசார் எனும் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது வரை மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அதில் 6 பேரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார்.