Skip to main content

இளைஞரைக் கொல்ல முயன்ற இந்து அமைப்பினர்! - காப்பாற்றிய காவலர் (வீடியோ)

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

இஸ்லாமிய இளைஞரை தாக்க முயன்ற இந்து அமைப்பினரிடம் இருந்து காப்பாற்றிய காவல்துறை அதிகாரி, பலரிடத்திலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 
 

Gagandeep

 

உத்தர்காண்ட் மாநிலம் ராம்நகர் பகுதியில் உள்ளது கிரிஜா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள இந்து கோவிலுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வழிபாட்டுக்காக சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்க்க வந்த இஸ்லாமிய இளைஞருடன் சேர்ந்து அந்தப் பெண் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை அந்தக் கோவிலுக்குள் இருந்த இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கவனித்துக் கொண்டிருக்க, திடீரென கூட்டமாகக் கூடி அந்த இளைஞரை தாக்கத்தொடங்கினர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங், இளைஞரைத் தாக்க முயன்ற கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 

இருப்பினும் சிலர் கோவில் கதவைப் பூட்டிவிட்டு, அந்த இளைஞரை வெட்டி வீழ்த்த வேண்டும் என கோஷம் எழுப்பத் தொடங்கினர். கும்பலுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம், ‘நீ இந்துப்பெண்.. இஸ்லாமிய இளைஞனிடம் உனக்கென்ன பேச்சு? அவனை இங்கேயே துண்டுகளாக வெட்டி வீசப்போகிறோம். அவனோடு பேசியதற்காக உன்னையும் வெட்டி வீசுவோம்’ என கூட்டத்தில் இருந்த ஒருவர் கத்தத் தொடங்கினார். 


 

அதேபோல், கும்பலிடம் சிக்கிக்கொண்ட இளைஞரை காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங், கூட்டத்தில் இருந்தவர்கள் தாக்கத் தொடங்கியதும் அவரைக் கட்டியணைத்து தன்னோடு பாதுகாப்பாக இழுத்துச் சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை உயிருடன் மீட்ட ககன்தீப் சிங் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"காந்தியையே விடவில்லை.. உங்களை விட்டுவிடுவோமா? - கர்நாடக முதல்வருக்கு மிரட்டல் விடுத்த வலதுசாரி ஆதரவாளர் கைது!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

right wing

 

கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற பகுதியில், சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த இந்து கோயில் ஒன்று, கர்நாடக அரசால் இடிக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கர்நாடகாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸும் அரசின் நடவடிக்கையை விமர்சித்தது. 

 

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை (18.09.2021) பத்திரிகையாளர்களைச் சந்தித்த வலதுசாரி ‘ஆர்வலர்’ தர்மேந்திர சுரட்கல், முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, அமைச்சர் சசிகலா ஜோலே ஆகியோரை தாக்கிப் பேசியதோடு, "நாங்கள் மகாத்மா காந்தியையே விடவில்லை. இந்துக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைக் கொன்றோம். அப்படியிருக்கையில் உங்களை விட்டுவிடுவோம் என நினைக்கிறீர்களா?" என்றார். 

 

மேலும் அவர், "சித்ரதுர்காவிலும், தட்சிண கன்னடத்திலும், மைசூரிலும் அரசாங்கத்தால் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. அரசாங்கத்தை நடத்துவது யார்? காங்கிரஸ் ஆட்சியின்போது இது நடந்திருந்தால், நிலைமை இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்து மகாசபை இருக்கும்வரை, இந்து கோயில்களை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதேபோன்று மசூதிகள் அல்லது தேவாலயங்கள் இடிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணமுடியுமா? கோவில்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றன. நமது அரசியலமைப்பு சமத்துவத்திற்கான உரிமையை உறுதிசெய்கிறது என்றால், இந்துக்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள்?" என பேசினார். 

 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்து மகாசபா மாநில தலைவர் எல்.கே. சுவர்ணா, தங்களது அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இந்து மகாசபையின் பெயரைப் பயன்படுத்தி காந்திக்கு எதிராகவும், பிற அரசியலமைப்பு அதிகாரிகளுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதாகக் காவல்துறையிடம் புகாரளித்தார். இதனையடுத்து  தர்மேந்திர சுரட்கலும், அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

மங்களூர் நகர போலீஸ் கமிஷனர் சஷி குமார், தர்மேந்திர சுரட்கல் இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர் என்றும், ஆட்சேபனைக்குரிய நடத்தைக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் தனக்குத் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தர்மேந்திர சுரட்கல் தற்போது அகில இந்திய இந்து மகாசபை என்ற அமைப்பில் செயல்படுவதாக கூறப்படுகிறது. 

 

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கிரிமினல் சதி, மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் மோசடியில் ஈடுபடுவது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

"ஜெய் ஸ்ரீராம்" கூறாததால் இஸ்லாமியர் மீது காரை ஏற்றிய இளைஞர்கள்...

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

டெல்லியில் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்ததால் 3 பேர் கொண்ட கும்பல் இஸ்லாமிய மதபோதகர் ஒருவரை கார் மூலம் தாக்கியுள்ளது.

 

 Maulana claims he was hit by car for refusing to chant Jai Sri Ram

 

 

டெல்லியின் ரோகிணி செக்டார் பகுதியில் உள்ள மதரசாவில் பயிற்சி அளிக்கும் மதபோதகர் மவுலானா மொமின், நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென அங்கு காரில் வந்து வழிமறித்த 3 பேர் மவுலானா மொமினிடம் பேசியுள்ளனர்.

பின்னர் அவரிடம் நலம் விசாரித்த போது, அல்லாவின் கருணையால் நலமுடன் இருக்கிறேன் என அவர் பதிலளித்துள்ளார். இதனையடுத்து 3 நபர்களும் மவுலானாவை ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட வலியுறுத்தியுள்ளனர். அவர் ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்ததால் அவரை கடுமையாக தாக்கிய நபர்கள் அவரை காரை வைத்து இடித்துள்ளனர்.

அதில் மொமீன் கடுமையாக காயமடைந்த நிலையில் மயக்கமடைந்துள்ளார். மொமினை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மொமினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.