Skip to main content

போயிங் 777 விமான சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய ஊழியர்!

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

குவைத் விமான நிலையத்தில் குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானத்தின் சக்கரத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்த ஆனந்த் ராமச்சந்திரன் (34) உயிரிழந்தார். இதனால் இவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்நதுள்ளனர். இவர் திருவனந்தப்புரத்தை சேர்ந்தவர் ஆவர். குவைத் ஏர்வேஸில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றியவர் ஆனந்த் ராமச்சந்திரன். அதனைத் தொடர்ந்து விபத்து நடந்த விமான நிலையம் சர்வதேச குவைத் விமான நிலையம் ஆகும்.

 

KUWAIT

 

இந்த விபத்து நடக்கும் போது விமானம் காலியாக இருந்ததாகவும் , 4-வது முனையத்திலிருந்து விமானத்தை அதன் நிறுத்துமிடத்துக்கு எடுத்துச் சென்ற போது விமானத்துக்கு அருகில் ஆனந்த் ராமச்சந்திரன் நின்று கொண்டு அதனை எடுத்துச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த போது விமான சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானதாக குவைத் ஏர்வேஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவரது உடல் நாளை அவரின் சொந்த ஊருக்குக்கு கொண்டு வர உள்ளது. மேலும் விமான விபத்தில் உயிரிழந்த ஆனந்த் ராமசந்திரனுக்கு மனைவி சோபினா மற்றும் மகள் நைனிகா ஆனந்த் உள்ளனர். இந்த சம்பவத்தால் ஆனந்த் ராமச்சந்திரனின் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே போல் விபத்து நடந்தது குறித்து குவைத் ஏர்வேஸ் நிறுவனம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட விபரீதம்; அலறிய விமானப் பயணிகள்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Mid-air mishap and Screaming airline passengers in america

அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையம் ஒன்றிலிருந்து அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘போயிங் 737 மக்ஸ்’ ரக விமானம் ஒன்று கடந்த 5 ஆம் தேதி புறப்பட்டது. 

171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் புறப்பட்ட இந்த விமானம், 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மையப் பகுதியில் இருந்த ஜன்னல் கதவு ஒன்று திறந்து விமானத்தை விட்டு வீசியடிக்கப்பட்டது. வான்வெளியைவிட விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் அதிகம் இருக்கும் என்பதால், உடைந்த ஜன்னல் வழியாகக் காற்று வேகமாக வெளியேறி விமானத்தில் இருந்த பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பயணிகளிடையே பதற்றம் நிலவியது. 

இதனையடுத்து, உடனடியாக விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு, பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில், அந்த ஜன்னலோர இருக்கையில் பயணிகள் இல்லாததால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து 727-9 ரக விமானங்களின் பயன்பாட்டையும் அலாஸ்கார் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. 

Next Story

போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத் தடை!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

90 pilots banned from operating Boeing aircraft


போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

போயிங் 737 MAX  ரக விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த தடைக்குப்பிறகு போயிங் விமானத்தை இயக்க மீண்டும் விமானிகளுக்கு முறையான பயிற்சி தரப்படும். போதிய விமானிகள் இருப்பதால் இந்த தடை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய விமான போக்குவரத்து இயக்குநர் அருண்குமார் இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.