குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள ஜஸ்டன் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
சமிபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியதால் இந்த இடைத்தேர்தல் இரு கட்சிகளுக்கும் இடையே கவுரவ பிரச்சனையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜஸ்டன் தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டு, பின்னர் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக வேட்பாளரும் மாநில அமைச்சருமான குன்வர்ஜி பவாலியா வெற்றி பெற்றார். இவருடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அவ்சர் நகியாவை 19,979 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக குன்வர்ஜி பவாலியா வெற்றிபெற்றார். கடந்த ஜூலை மாதம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் சேர்ந்து அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.