மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுபோல தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளாலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில் பாஜக வின் தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலின்போதும் இதே நாளில்தான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. எனவே, அதே தேதியில் இந்த முறையும் தேர்தல் அரக்கியை வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு, புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.